Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சித் கோப்பை: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (17:58 IST)
முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 9ம் தேதி முதல் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது 
 
சௌராஷ்ட்ரா அணி மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி சௌராஷ்ட்ரா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது 
 
இதனையடுத்து சௌராஷ்ட்ரா அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 381 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய சௌராஷ்ட்ரா அணி 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது
 
இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் சௌராஷ்ட்ரா அணி அதிக ரன்கள் எடுத்து இருந்ததால் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சௌராஷ்ட்ரா அணி முதல் முறையாக ரஞ்சித் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ஆர்பித் வசவதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments