Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினிடம் சிராஜ் சொன்ன வார்த்தை… பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:39 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார்.

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட்களையும் ஒரு சதமும் அடித்த தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தனது சொந்த ஊர் மைதானத்தில் அவர் சிறப்பாக விளையாடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது அணி 9 விக்கெட்களை இழந்துவிட்டு இருந்தது, அஸ்வினுக்கு எதிர்முனையில் சிராஜ் நின்று பந்துகளை தடுப்பாட்டம் ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் அஸ்வினிடம் ‘நான் பந்துகளை தடுப்பதை பார்த்தால் என் தந்தைக் கூட கைதட்ட மாட்டார். ஆனால் ரசிகர்கள் எல்லா பந்துகளுக்கும் கைதட்டுகிறார்கள். நீங்கள் கண்டிப்பாக சதம் அடிக்க வேண்டும். நான் உங்களோடு நிற்பேன் எனக் கூறியுள்ளார்’ இதை அஸ்வின் தனது யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக வீரருக்காக சந்தோஷப்படும் சிராஜின் நல்ல மனதை எண்ணி இப்போது ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments