Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் தோல்வி - சிமோனா ஹாலெப் சாம்பியன் !

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (11:46 IST)
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிருக்கான ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸும் ருமேனியாவைச் சார்ந்த சிமோனா ஹாலெப்பும் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிமானோ ஹாலெப் 6-2, 6-2  என்ற நேர் செட்களில் செரினா வில்லியம்ஸை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், பெண்களுக்கான இரட்டையர் ஆட்டம், கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றின் இறுதிப் போட்டி இன்றோடு முடிய இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments