Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால் இறுதிக்கு முன்னேற்றம்

Webdunia
புதன், 3 செப்டம்பர் 2014 (10:54 IST)
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4 ஆவது சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், எஸ்டோனியாவின் கனேபியை எதிர்கொண்டார்.

இதில் செரீனா 6–3, 6–3 என்ற நேர்செட்டில் கனேபியை வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4  ஆவது சுற்று ஆட்டத்தில்  நோவாக் ஜோகோவிச் 6–1, 7–5, 6–4 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரை  தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

மேலும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4–6, 7–6, 6–7, 7–5, 6–4 என்ற நேர்செட்டில் போராடி கனடா வீரர் மிலோச் ரானிச்சை வீழ்த்தி கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

கலப்பு இரட்டையர் கால் இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா – புருனோ சோரஸ் ஜோடி 7–5, 2–6, 10–5 என்ற நேர்செட்டில் காதரினா செர்போனிக் –ரோகன் போபண்ணா ஜோடியை வீழ்த்தியது.

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

Show comments