Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:44 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவருருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். போட்டியின் போது செரினாவின் பயிற்சியாளர் சைகை மூலம் செரினாவிற்கு ஹிண்ட் கொடுத்தார். இது போட்டியின் விதிமீறலாகும்.
 
மேலும் கோபத்தில் செரினா டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதுவும் ஒரு விதிமீறலாகும். எனவே நடுவர் செரினாவின் புள்ளியை குறைத்தார்.  
இதனால் கடுப்பான செரினா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவரை ஒரு பித்தலாட்டக்காரர் என கடுமையாக விமர்சித்தார். இந்த போட்டியில் செரினா  6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிதல், பயிற்சியாளர் ஹிண்ட் கொடுத்தல், நடுவரை கடுமையாக திட்டுதல் ஆகிய விதிமீறலுக்கு செரினா மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments