Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
, புதன், 20 ஜனவரி 2016 (17:12 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்ம், மரியா ஷரபோவாவும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
 

 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் சாஸ்னோவிச்சுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்
 
இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடந்த மற்றொரு போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சீனத் தைபேயின் சுவேய்ஷேவை எதிர்த்து விளையாடினார். இதில் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் எளிதில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil