நடராஜனை ஏலத்தில் எடுத்தது எப்படி? சேவாக் ருசிகரம்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (15:59 IST)
அணியில் இடம்பிடித்துள்ள நட்ராஜனை ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக எடுத்தது எப்படி என சேவாக் தெரிவித்துள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக முதல் முதலாக ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது தொடர்பாக அந்த அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான சேவாக் தெரிவித்துள்ளார். அதில் ‘2017 ஆம் ஆண்டு பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அவரை 3 கோடிக்கு எடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு, அவருக்கு முழங்கை மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டது, அவர் களமிறங்கிய போட்டிகளில் மட்டுமே நாங்கள் வென்றோம். மற்ற எல்லா போட்டிகளிலும் தோற்றோம். தற்போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதைக் கண்டு நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அவர் டி 20 போட்டிகளில்தான் வாய்ப்பளிக்கப்படுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments