Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னாவுக்கு இப்படியாவது ஃபேர்வெல் கொடுத்திருக்கலாம்… ஷேவாக் ஆதங்கம்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (11:16 IST)
சி எஸ் கே அணியின் பில்லர்களில் ஒருவரான ரெய்னாவை இந்த ஆண்டு அந்த அணி கழட்டிவிட்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.

அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் முன்னாள் வீரர்கள் பலருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரெய்னா பற்றி பேசியுள்ள சேவாக் ‘ரெய்னா சி எஸ் கே அணிக்காக நிறைய செய்துள்ளார். பல ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடியுள்ளார். அவரை 2 கோடி ரூபாய்காவது ஏலம் எடுத்து ஒரு இரண்டு போட்டிகள் விளையாட வைத்து பின்னர் அவருக்கு விடை கொடுத்திருக்கலாம். ஆனால் அவரை எடுப்பது குறித்து சி எஸ் கே நிர்வாகம் நினைக்கவே இல்லை என தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments