Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம்… சேவாக் அறிவுரை!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (13:38 IST)
இந்திய அணியினர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது என முன்னாள் இந்திய வீரர் சேவாக் கூறியுள்ளார்.

தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கோலி பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதே போல முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் ‘இந்தியா நியுசிலாந்துக்கு எதிராக விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது. நியுசிலாந்து சிறப்பாக விளையாடியது. இந்திய வீரர்களின் உடல்மொழியே சரியே இல்லை. நம் அரையிறுதி வாய்ப்பை அந்த போட்டி கிட்டத்தட்ட இல்லை என்று ஆக்கிவிட்டது. நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments