Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது 2 ஆவது போட்டி – இந்தியாவின் வெற்றி தொடருமா ?

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (11:59 IST)
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இரண்டாவது போட்டி இன்று  நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. தொடக்க வீரரான ஷிகர் தவண் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்குப் பதிலாக ராகுல் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரின் இரண்டுப் போட்டிகளிலும் ராகுல் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய் சங்கருக்குப் பதிலாகவும் ரிஷப் பண்ட் களமிறக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை டி 20 தொடரில் சிறப்பாக விளையாண்டு அசத்தினர். ஆனால் இன்னும் ஒருநாள் போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு தாக்கத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய நேரப்படி 1.30 மணிக்கு இந்தப் போட்டித் தொடங்க இருக்கிறது.

இந்திய உத்தேச அணி
விராட் கோலி, ரோஹித் சர்மா, அம்பாத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல்,  குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி.

ஆஸ்திரேலியா உத்தேச அணி
ஆரோன் பின்ச் (கேப்டன்), டி’ஆர்சி ஷார்ட், ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் காரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா, நேதன் லயன், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஹை ரிச்சர்ட்சன், பாட் கம்மின்ஸ், ஆன்ட்ரூ டை, நேதன் கவுல்டர் நைல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments