Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை செல்லும் இந்திய அணி.. கிண்டல் செய்து வாழ்த்து கூறிய சசிதரூர் எம்பி..!

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:35 IST)
இலங்கை செல்லும் இந்திய அணி குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த அணியின் தேர்வாளர்களை கிண்டல் செய்து அணிக்கு தனது வாழ்த்துக்களை சசி தரூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டி20  மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி 20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும் ஒரு நாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி20 மற்றும் ஒரு நாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சஞ்சு ஜான்சன் டி20 அணியில் இடம் பெற்றுள்ளார் என்பதும் ஒரு நாள் தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் ருத்ராஜ் ஆகியோர் டி20 மற்றும் ஒரு நாள் அணிகளில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய அணிக்கான தேர்வை காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது சமூக வலைதளத்தில் கிண்டலுடன் பதிவு செய்துள்ளார். இலங்கை செல்லும் இந்திய அணியின் தேர்வு ஆச்சரியமாக உள்ளது. கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு ஜான்சன் ஒரு நாள் அணியில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் சர்மா டி20 அணியில் இடம்பெறவில்லை.

சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் தேர்வாளர்களுக்கு அது குறையாகவே படுகிறது. இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments