Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு சானியா ஜோடி

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (17:57 IST)
சீன ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு  சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றது.


 

 
சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சானியா - ஹிங்கிஸ் ஜோடியும் சீனாவைச் சேர்ந்த சென் லியாங்- யபான் வாங் ஜோடியும் மோதியது.
 
சொந்த ஊரில் விளையாடினாலும் சீன ஜோடியால் சானியா ஜோடிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் சானியா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்  6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில்  சானியா ஜோடி , டெல்லாக்குவுா- ஸ்வெடோவா அல்லது ஹெச் சான்- ஒய் சான் ஜோடியை எதிர் கொள்ள இருக்கிறது.
 
சானியா- ஹிங்கிஸ் ஜோடி கடந்த சில மாதங்களில் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அடுத்தடுத்து வென்று டென்னிஸ் விளையாட்டில் உலக சாதனைப் படைத்தது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments