Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் ஓய்வு முடிவு... அவரது விருப்பத்தினாலா? இல்லை சிலரின் கட்டாயத்தினாலா?

சச்சின் ஓய்வு முடிவு... அவரது விருப்பத்தினாலா? இல்லை சிலரின் கட்டாயத்தினாலா?
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (14:33 IST)
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வு பெறவில்லை. அவர் ஓய்வு பெறாவிட்டால் நாங்களே நீக்கியிருப்போம் என முன்னாள் கிரிக்கெட் தேர்வாளர் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சர்சைக்குரிய செய்தியை கூறியுள்ளார்.

 
இதன் வாயிலாக, சச்சின் டெண்டுல்கர் கட்டாயப்படுத்தப்பட்டு ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2012ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார் சச்சின். அடுத்த ஆண்டே டெஸ்ட் போட்டி உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓயவு பெற்றார். 
 
24 வருட காலம் கிரிக்கெட் ஆடிய சச்சினின் கடைசி வருடங்களில் அவரது ஓய்வு குறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து சந்தீப் பாட்டீல் சர்சைக்குறிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
2012 சச்சின் -  சந்தீப் பாட்டீல் சந்திப்பு:
 
அந்த சமயத்தில் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியிலிருந்து சச்சினை நீக்கும் முடிவுக்கு தேர்வாளர் குழு ஒருமித்த முடிவை எடுத்திருந்தது. அந்த முடிவோடு சந்தீப் பாட்டீல், சச்சினைப் போய் சந்தித்தார்.
 
சச்சினைச் சந்தித்த சந்தீப் பாட்டீல், அவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு சச்சின், இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, தேர்வுக் குழு எடுத்த ஒருமித்த முடிவையும், சச்சினிடம் தான் பேசியது குறித்தும் கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார் பாட்டீல்.
 
சச்சினுக்கு அறிவுரை:
 
கிரிக்கெட் வாரியம், சச்சினுக்கு அறிவுரை வழங்கியது. தேர்வுக் குழுவின் முடிவை சச்சினிடம் தெரிவித்தனர். இதைக் கேட்ட பிறகே சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வாரியமும் கூட ஓய்வு பெறுங்கள் என்று சச்சினிடம் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது. 
 
மேலும், ஒரு வேளை அவர் முடிவெடுத்திருக்காவிட்டால் நாங்கள் நிச்சயம் அணியிலிருந்து நீக்கியிருப்போம் என்று பாட்டீல் கூறினார்.
 
ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு 39 வயது. 463 போட்டிகளில் ஆடி 49 சதங்களையும், 96 அரை சதங்களையும் போட்டுள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர். மொத்தம் 18,426 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தோனியும், விராட்டும் இரு துருவங்கள்' சந்தீப் பாட்டில் பளிச் பேட்டி