Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக் பேட்மின்டன் தரவரிசை: 5-வது இடத்தில் சாய்னா நேவால்

ஒலிம்பிக் பேட்மின்டன் தரவரிசை: 5-வது இடத்தில் சாய்னா நேவால்

ஒலிம்பிக் பேட்மின்டன் தரவரிசை: 5-வது இடத்தில் சாய்னா நேவால்
, சனி, 23 ஜூலை 2016 (12:14 IST)
ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டித் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.



பிரேஸிலில் நடைபெறவுள்ள ரியோ 2016 ஒலிம்பிக் போட்டி வரும் ஆக.,5-ந் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 121 பேர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டித் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 5-வது இடமும், மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு 9-ஆவது இடமும் கிடைத்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் லீ சோங் வெய் முதலிடமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மார்டினும் முதலிடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி இரட்டை சதம்; அஸ்வின் சதம் - இந்தியா அபாரம்