Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஒலிம்பிக் தூதரானார் சச்சின்

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (17:19 IST)
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தூதராக செயல்பட இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்திய ஒலிம்பிக் தூதர் பட்டியலில் மூன்றாவது நபராக இணைந்துள்ளார்.


 
 
ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 போட்டிக்காக இந்தியா சார்பில் தூதராக செயல்பட சச்சின் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியது இந்திய ஒலிம்பிக் சங்கம். இந்த அழைப்பிதல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சச்சின், தற்போது இந்திய தூதராகியுள்ளார்.
 
இதையடுத்து, ஏற்கனவே சல்மான்கான், அபினவ் பிந்த்ரா ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில், சச்சின் மூன்றாவது தூதராக அவர்களுடன் இணைந்துள்ளார். மேலும், சச்சினுக்கு அடுத்து ஏ.ஆர்.ரகுமான் விரைவில் அழைப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா சார்பில் தூதராவார் என்றும், சல்மான்கானுக்கு பதில் வேறொரு பிரபலத்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்றும், இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜிவ் மெக்தா தெரிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments