மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:59 IST)
ஐபிஎல் தொடரில் கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் இந்த சீசனுக்கான வெற்றியில் தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நேற்றைய வெற்றியிலும் முக்கியமானக் கட்டத்தில் 70 ரன்களை சேர்த்தார். இந்நிலையில் நேற்று அவர் இந்த சீசனில் 600 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் ஆனார். கே எல் ராகுல் 626 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ருத்துராஜ் 602 ரன்கள் சேர்த்துள்ளார்.

சென்னை அணிக்காக இதற்கு முன்னர் மைக் ஹஸ்ஸி மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அசாத்திய திறமையால் இப்போது அவருக்கு மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments