Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2015 (17:56 IST)
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத்தொகை ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
வரும் 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 75 வழங்கப்படும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
 

 
இதற்கு முன்னர் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.20 லட்சமும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்தது.
 
தற்போது இந்த பரிசுத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்கம் வெல்பவர்களுக்கு ரூ. 75 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதேபோல் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாகவும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

Show comments