Webdunia - Bharat's app for daily news and videos

Install App

88 ரன்களில் வீழ்ந்தது பஞ்சாப்: பெங்களூருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

Webdunia
திங்கள், 14 மே 2018 (21:53 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 48வது போட்டியான இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதல் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 
 
இந்த போட்டியில் பெங்களூர் அணியின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் பின்ச் 26 ரன்களும், ராகுல் 21 ரன்களும் எடுத்தனர். இந்த அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமலும், 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
 
பெங்களூர் அணியின் யாதவ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சிராஜ், சாஹல், கிராந்தோம், மற்றும் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூர் அணி தற்போது விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை பெங்களூர் அணி 2.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பாக அமையும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments