Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல்தகுதி சோதனையில் தேறிய ரோஹித் ஷர்மா – ஆஸிக்கு பயணம்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:06 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம்பெற்றார். ஆனாலும் ஆஸ்திரேலியா செல்லாத அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தனது உடல்தகுதியை நிருபிக்க பயிற்சிகள் மேற்கொண்டார். அவருடன் இஷாந்த் ஷர்மாவும் பயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் பெங்களூருவில் இப்போது அவர் தனது உடல்தகுதியை நிரூபித்து உள்ளார். இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளார். டிசம்பர் 14 ஆம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் அங்கே தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுவார். அதில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments