சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (08:00 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ரோகித் சர்மா சர்வதேச டி 20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் இன்றுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்.

இந்த நிலையில் உலககோப்பை வாங்கி கொடுத்த பெருமையுடன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்படுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments