Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வாங்க ஆலோசனை கேட்ட ரிஷப் பண்ட்… கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (09:50 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி நாடு திரும்பியுள்ளார்.

பயங்கரமான அவநம்பிக்கைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். இதையடுத்து இப்போது இந்தியா திரும்பி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததில் இருந்தே என் வீட்டில் உள்ளவர்கள் புதிதாக வீடு வாங்கும் நேரம் இது என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் வீடு வாங்க சிறந்த இடங்களை பரிந்துரையுங்கள்.’ எனக் கூறியிருந்தார். பண்ட்டின் இந்த டிவீட்டுக்கு பதிலளித்த முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் ‘ஏன் நீங்கள் ஒரு கிரிக்கெட் மைதானம் வாங்க கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments