இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு: கோப்பையை வெல்லுமா?

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (07:59 IST)
இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு
ஐபில் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே அசத்தி வரும் பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ரன் ரெட் எகிறிய நிலையில் தற்போது புள்ளிகள் பட்டியலில் அந்த அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது
 
இந்த தொடரில் பெங்களூர் அணி 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வென்று மூன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. பெங்களூர் அணி இரண்டாவது இடத்திலும் அதே புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையும் டெல்லி அணி முதலிடத்திலும் உள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
பெங்களூரு அணி கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதி போட்டி வரை வந்து கோப்பையை நழுவவிட்டது என்பதும், இந்த ஆண்டு அந்த அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments