Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியின் கேப்டனையே கலாய்த்த அட்மின்… நடவடிக்கை எடுத்த அணி நிர்வாகம்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:56 IST)
சஞ்சு சாம்சனை கலாய்க்கும் விதமாக புகைப்படம் வெளியிட்ட அணியின் அட்மினை மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் மூலம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிகம் கவனம் ஈர்த்துவருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கம்தான். நகைச்சுவையாக பல பதிவுகளை அவ்வப்போது அந்த பக்கத்தின் அட்மின் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் என்று சஹால் புகைப்படத்தை பதிவு செய்து குழப்பத்தை உண்டாக்கி, பின்னர் அது நகைச்சுவையாக பண்ணியது எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் இப்போது அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கோமாளி போல சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டார் சஞ்சு.

அந்த புகைப்படத்தில் ’நண்பர்களுக்குள் இப்படி விளையாடுவது வாடிக்கை. ஆனால் அணி என்றால் ஒரு அணி என்றால் அது புரொபஷனலாக இருக்கவேண்டும்’ எனத் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அணி நிர்வாகம் இப்போது தங்கள் சமூகவலைதளக் குழுவை மாற்ற முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துக்குள் சில குழப்பங்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments