Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை போராடி தோல்வி: ராஜஸ்தான் த்ரில் வெற்றி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (23:49 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ரெய்னா 52 ரன்களும், வாட்சன் 39 ரன்களும் கேப்டன் தோனி 33 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. இரண்டாவது பந்தில் 2 ரன்களும், மூன்றாவது பந்தில் 2 ரன்களும், நான்காவது பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்ததால் இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகள் எடுத்து 6வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments