இந்திய அணியை தொடும் தூரத்திற்கு வந்துவிட்டேன்: குஜராத் வீரர் ராகுல் திவெட்டியா ..!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (16:25 IST)
இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு நெருங்கி விட்டேன் என்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ராகுல் திவெட்டியா பேட்டி அளித்துள்ளார். 
 
ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ராகுல் திவெட்டியா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய பேட்டிங்கில் பந்துகள் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கிராமத்தில் இருந்து வந்த நான் இப்போது ஐபிஎல் போட்டியில் நல்ல பினிஷர் ஆக மாறி இருக்கிறேன் என்றும் இப்போது நான் இந்திய அணியை தொடும் தூரத்திற்கு வந்து விட்டேன் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார். 
 
சிறுவயதில் டிவியில் கிரிக்கெட் பார்க்கும்போது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது என்றும் அதை இப்போது நான் நெருங்கி விட்டேன் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments