Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் நடால்

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் நடால்
, சனி, 2 ஜனவரி 2016 (19:49 IST)
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் கனடாவின் மிலஸ் ரானிச்வுடன் மோத உள்ளார்.


 

 
துபாயில் நடைபெற்று வரும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதி ஆட்டத்தில், டேவிட் ஃபெரரை எதிர்த்து நடால் விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடால் போராடி வெற்றி பெற்றார்.
 
இந்த தொடரின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும் கனடாவின் மிலஸ் ரானிச் விளையாடினர். ஆட்ட நேர இறுதியில் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் மிலஸ் ரானிச் வெற்றி பெற்றார். இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் நடாலும், ரானிச்சும் மோத உள்ளனர். இந்த ஆட்டம் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil