காமன்வெல்த் 2022; தங்க பதக்கத்தை வென்றார் தங்க மங்கை பி.வி.சிந்து!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (15:16 IST)
பர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளார்.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கி நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக பல்வேறு போட்டிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றுடன் இந்த போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் நேற்று வரை நடந்த போட்டிகளில் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என 55 பதக்கங்களை வென்று 5 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கனடா வீராங்கனை மைக்கெல் லீயை எதிர்கொண்டார். இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments