Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

Siva
வியாழன், 13 மார்ச் 2025 (09:00 IST)
இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென் கொரிய வீராங்கனை கா யூன் கிம்முடன் மோதினார்.

இந்த போட்டியில் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி பெற்ற நிலையில் அதன்பின், பி.வி. சிந்துவை சுதாரிக்க விடாமல் தென்கொரிய வீராங்கனை அடுத்தடுத்து செட்டையும் வென்று வெற்றி பெற்றார். இதனால், முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து, பி.வி. சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள, உலக அளவில் பதினாறாம் நிலை பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 21ஆம் இடத்தில் உள்ள கொரிய வீராங்கனைக்கு எதிராக ஆட்டம் 61 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த ஆட்டத்தில் 21-19, 13-21, 13-21 என்ற செட்களில் பிவி சிந்து தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments