Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி, ராகுல் ஏமாற்றம்; புஜாரா, மயங்க் அரைசதம் - சிட்னியில் இந்தியா ஆதிக்கம்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (10:44 IST)
சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்ரு வரு நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட்டை வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ ஆஸ்திரேலிய மண்ணில் 70  ஆண்டுகளாக டெஸ்ட் தொட்ரை வென்றதில்லை என்ற அவப்பெயரை நீக்கி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழத்தும். எனவே இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒருத் தனித்துவமான போட்டியாக இருக்கும் என இந்திய கேப்டன் விராட் கோஹ்லியே தெரிவித்திருக்கிறார்.
 
இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை தொடங்கியது சிட்னி டெஸ்ட். இப்போட்டியில் இந்தியா சார்பில் ரோஹித்துக்கு பதிலாக  கே எல் ராகுலும், இஷாந்த் ஷர்மாவுக்குப் பதில் குல்தீப் யாதவும் களமிறக்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், மய்ங்க் அகர்வாலும் களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருவதால் 3 வது டெஸ்ட்டில் உட்காரவைக்கப்பட்டு மீண்டும் இந்த டெஸ்ட்டில் வாய்ப்பளிக்கப்பட்ட ராகுல் இம்முறையும் ஏமாற்றமளித்தார். இரண்டாவது ஓவரிலேயே ஹாசில்வுட் வீசியப் பந்தில் ஷான் மார்ஷ் வசம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் வெளியேறினார். அதையடுத்து மயங்க் அகர்வாலோடு புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானமாக விளையாட மயங்க் அகர்வால் ரன் சேகரிப்பில் இறங்கினார். 
 
சிறப்பாக விளையாடிய மய்ங்க் அகர்வால் அரைசதம் அடித்தார். நாதன்  லயன் வீசிய 33 ஓவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட மயங்க், ஸ்டார்க் வசம் கேட்ச் கொடுத்து 77 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கியக் கோஹ்லி புஜாராவோடு இணைந்து கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தார். 23 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய புஜாரா அரை சதம் அடித்து களத்தில் இருக்கிறார்.
 
தற்போதைய நிலவரப்படி இந்தியா 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 73 ரன்களுடனும் ரஹானே 8 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments