Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது புனே

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (23:46 IST)
கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டமாக இன்று முதலாவது பிளே ஆப் போட்டி மும்பையில் நடைபெற்றது.



 


இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் புனே அணி பேட்டிங்கில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் தோனியின் அதிரடியால் அந்த அணி 42 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னிலும் சிம்மன்ஸ் 5 ரன்களிலும், ராயுடு டக் அவுட்டும் ஆகினர். இதனால் கடைசி வரை தத்தளித்து வந்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் புனே அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை மீண்டும் மோதவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments