Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பயர் தவறால் எங்கள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கூட பாதிக்கப்படலாம்… கடுப்பான பிரீத்தி ஜிந்தா!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:15 IST)
நேற்றைய போட்டியில் நடுவர் நிதின் மேனனின் தவறால் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 19வது ஓவரில் ரபோடா வீசிய பந்தை ஜோர்டான் லாங் லாங் ஆன் அடித்துவிட்டு ஓடி ரன் எடுத்தார். அப்போது மட்டையால் ரீச்சை அவர் தொடவில்லை என ஒரு ரன்னை அம்பயர் நிதின் மேனன் குறைத்தார். தற்போது அந்த வீடியோவை கவனித்ததில் ஜோர்டான் ரீச்சை தொட்டது தெரிய வந்துள்ளது. அப்போது அந்த ஒரு ரன் அளிக்கப்பட்டிருந்தால் சூப்பர் ஓவர் போகாமலே பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும். இதனால் வெற்றி வாய்ப்பு டெல்லிக்கு போனது.

இந்த சம்பவம் பஞ்சாப் அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், அம்பயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஸ்க்ரீன் ரிவ்யூ பெறலாம் என்றும் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா இந்த தவறான முடிவு குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் ‘நான் இந்த பெருந்தொற்றுக் காலத்துல் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 5 கொரோனா சோதனைகளை மேற்கொண்டு இங்கே வந்தேன். ஆனால் நடுவரின் தவறால் எங்கள் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் என்ன பயன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் அணியின் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் மேனன், ஆட்ட நடுவரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த தோல்வியால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கூட பறிபோக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments