Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை காபாற்றியது டிராவிட் சொன்ன அறிவுரை! புஜாரா நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:41 IST)
ராகுல் டிராவிட் கொடுத்த ஐடியாதான் என்னைக் காப்பாற்றியது என் புஜாரா கூறியுள்ளார்.

சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்திலும் மொயின் அலி மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்களையே அதிகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் சுவர் போல நின்று ஆடும் புஜாராவை எந்த அணியும் எடுக்காத போது சென்னை அணி அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது இந்த ஆண்டுதான்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டி 20 போட்டியில் ஆடுவது குறித்து பேசியுள்ள புஜாரா ‘டி 20 போட்டிகளில் அதிகமாக விளையாடினால் என்னை விட்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரைதான் என்னைக் காப்பாற்றியது. பல விதமான ஷாட்களை ஆடுவதால் உன்னுடைய இயல்பான திறமை போய்விடும் என நினைக்காதே’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments