Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணி 4-வது முறை தோல்வி

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (10:49 IST)
பெங்களூரு புல்ஸ் அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.


 


 
ஐதராபாத்: 4-வது புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் 19-வது லீக்கில் பெங்களூரு புல்ஸ் அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. தெலுங்கு அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சம பலத்தில் புள்ளிகளை பெற்றது, பிறகு, பெங்களூரு அணியை சேர்ந்த ரோஹித் குமார் சென்ற ரைடில் 11 புள்ளிகள் எடுத்து, அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெங்களூரு அணியினரின் ரைடர்களை தடுக்க முடியாமல், புள்ளிகளை கோட்டைவிட்டது. கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் 26 புள்ளிகள் மட்டுமே எடுத்தனர்.

அந்த நேரத்தில் பெங்களுரு புல்ஸ் அணி 36 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. சொந்த ஊரிலேயே தெலுங்கு அணி தோல்வியடைந்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
 
இன்றைய ஆட்டங்களில் டெல்லி-ஜெய்ப்பூர் (இரவு 8 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments