Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெய்ப்பூர் அணி

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:06 IST)
புரோ கபடி லீக் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி ஜெப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜூலை 26, 2014 முதல் பல்வேறு நகரங்களில் புரோ கபடி லீக் தொடர் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியில் மும்பையும் ஜெப்பூர் அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றன.

இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி மும்பையில் ஆகஸ்ட் 31, 2014 அன்று நடைப்பெற்றது.

விறுவிறுப்பாக ஆரம்பித்த இப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஜெய்ப்பூரின் விறுவிறுப்பான ஆட்டத்தால் மும்பை அணி திகைத்துப்போனது.

இறுதியில் ஜெய்ப்பூர் அணி 35-24 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி முதலாவது புரோ கபடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜெய்ப்பூர் அணியை பொருத்தவரை ஆல்- ரவுண்டராக ராஜேஷ் நார்வல் ஜொலித்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக ரைடர் அனுப்குமார் 11 புள்ளிகளை சேகரித்தார்.

சாம்பியன் கோப்பையுடன் 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் ஜெய்ப்பூர் அணிக்கு வழங்கப்பட்டது.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments