Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: டெல்லியை வீழ்த்தியது குஜராத்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:55 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே குஜராத் கை ஓங்கியிருந்த நிலையில் இறுதியில் 31 புள்ளிகள் எடுத்து குஜராத் அணி வெற்றிபெற்றது. டெல்லி அணி 26 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி ரெய்டில் 17 புள்ளிகளும்,டேக்கிளில் 10 புள்ளிகளும், ஆல் அவுட் மற்றும் இதர வகையில் தலா இரண்டு புள்ளிகளும் பெற்றது. அதே போல் டெல்லி அணி  ரெய்டில் 13 புள்ளிகளும்,டேக்கிளில் 9புள்ளிகளும், ஆல் அவுட் மற்றும் இதர வகையில் தலா இரண்டு புள்ளிகளும் பெற்றது. 
 
இன்றைய போட்டியில் நவீன் குமார் தனது குஜராத் அணிக்கு 10 புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்த போதிலும் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி மொத்தம் 16 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments