Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: ஹரியானா, டெல்லி அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (23:10 IST)
புரோ கபடி போட்டியின் முதல்கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஹரியானாவில் அடுத்த கட்ட போட்டிகள் தொடங்கியது. இன்றைய முதல் போட்டியில் குஜராத் மற்றும் ஹரியானா அணிகள் மோதிய நிலையில் ஹரியானா தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 36-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இரண்டாவதாக நடந்த போட்டியில் டெல்லி அணி, புனே அணியை வீழ்த்தியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிக புள்ளிகளை டெல்லி அணி பெற்றதால் 41-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஏ பிரிவில் புனே அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெல்லி, மும்பை அணிகள் 8 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதேபோல் பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உபி 6 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் பெங்களூரு தலா 5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது என்பதும் மற்ற அணிகள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments