Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையிடம் இருந்து வெற்றியைப் பறித்த 19 வயது இளைஞர்! ஆட்டநாயகன் பிரியம் கார்க்!

பிரியம் கார்க்
Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (15:17 IST)
நேற்றைய போட்டியில் சென்னை அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்ததில் சன் ரைஸர்ஸ் அணியின் பிரியம் கார்க் முதன்மையானவர்.

நேற்றைய போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அணியின் ரன்ரேட்டும் 7 க்கு கீழாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு வந்த பிரியம் கார்க் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சிறப்பான ஸ்கோரை எட்டினர். பிரியம் கார்க் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 52 ரன்களை சேர்த்தார். அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஏமாற்றினாலும் பின்வரிசையில் வந்த இளம்வீரர்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற கார்க் ‘என் இயல்பான ஆட்டமாக அடித்து ஆடுவதையே விரும்பினேன். பவுலர்களின் பந்துவீச்சும் அதற்கேற்றார் போல இருந்தது. இதற்கு முந்தைய போட்டியில் நான் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் என்னை அணியில் சேர்த்தனர். அபிஷேக் உடன் நான் என் சிறுபிராயம் முதல் பேட் செய்து வருகிறேன் எனவே புரிதல் எளிதாக இருந்தது. இன்றைய ஆட்டத்துக்குப் பிறகு தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments