Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் விதி… ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன் – பிருத்வி ஷா உருக்கம் !

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (15:18 IST)
ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடைவிதிக்கப்பட்டுள்ள இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா அது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின்  வருங்கால முகங்களுள் ஒன்றாக வளர்ந்து வருகிறார் பிருத்வி ஷா. காயத்தால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவர் அதன் பின் இன்னும் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் நடந்த முஷ்டாக் அலி ட்ராபி போட்டிகளின் போது பிரிதிவி ஷாவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அவரின்  சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ‘டெர்புடலின்’ எனும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்  8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடைவிதித்து பிசிசிஐ நேற்று உத்தரவிட்டது. இந்தத் தடை காலம் மார்ச் 16-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பிருத்வி ஷா பிடிஐ யிடம் பேசியுள்ளார். அப்போது ‘மிகவும் உண்மையுடன் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்கிறேன். எல்லாம் என் தலைவிதி. இப்போதும்கூட நான் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறேன், பிசிசிஐ அளித்த தண்டனை என்னை உலுக்கிவிட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியதும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டேன். அப்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளுக்காக தடை செய்யப் பட்ட மருந்துகளைத் தவறாக எடுத்துவிட்டேன். தடையில் இருந்து வெளியே வரும்போது இன்னும் வலிமையாக வருவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!

தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments