Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வீரர் பத்திரானாவின் முதல் ஒருநாள் போட்டி: ஆப்கன் அணிக்கு எதிராக விளையாடுகிறார்..!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (10:33 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பத்திரானா இன்று தனது சர்வதேச முதல் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். 
 
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பத்திரானா மிக அருமையாக பந்து வீசினார் என்பதும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அந்த போட்டியில் இலங்கை அணையின் சார்பில் பத்திரானா விளையாடுகிறார். இந்த போட்டி தான் அவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கொடுத்த அறிவுரையின்படி இன்று அவர் விக்கெட்டை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இலங்கை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments