Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சகர்களே கோலியைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருங்கள்… நாங்கள் அவரைக் கவனித்துக்கொள்கிறோம் – பாட் கம்மின்ஸ் ஆதங்கம்!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (10:55 IST)
டெஸ்ட் தொடரில் கோலி இடம்பெறாதது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து ஆஸ்திரெலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. தனது மனைவிக்கு பிரசவம் நடக்க உள்ளதால் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியா திரும்பியுள்ளார். கோலி டெஸ்ட் போட்டிகளில் இல்லாதது குறித்து கிட்டத்தட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் எல்லோரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கடுப்பான ஆஸி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நீங்கள் எல்லோரும் கோலியைப் பற்றியே பேசிக்கொண்டு இருங்கள். நாங்கள் அவரை பேச விடாமல் செய்கிறோம்’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments