Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லியால் கூட முடியாததை சாதித்து காட்டிய பரஸ் கட்கா – ஐசிசி புகழாரம்

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (16:37 IST)
டி20 போட்டிகளில் இந்திய முன்னனி வீரர்களால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து சாதனை படைத்துள்ளார் நேபாள கிரிக்கெட் வீரர் பரஸ் கட்கா.

சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி 20 போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் நேபாள அணிகள் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையைல் களமிறங்கிய நேபாள அணி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது நேபாள அணியின் கேப்டன் பரஸ் கட்கா 49 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதுவரை இந்திய முன்னனி வீரர்கள் யாருமே 20 ஓவர்கள் போட்டியில் சதம் அடித்திராத நிலையில் பரஸ் கட்கா இந்த சாதனையை படைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஐசிசி 2010ம் ஆண்டு டி20ல் சுரேஷ் ரெய்னா சதம் அடித்தது ஒன்று மட்டுமே இந்தியாவின் சாதனையாக இதுவரை இருந்து வருவதையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments