Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்: இந்தியா பதக்கங்களை வெல்லுமா?

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (06:59 IST)
பாரா ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்: இந்தியா பதக்கங்களை வெல்லுமா?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்
 
அதன்படி இந்த ஆண்டு 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த போட்டி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் 164 மூன்று நாடுகளை சேர்ந்த 4500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவிலிருந்து 54 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். வில்வித்தை தடகளம் நீச்சல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை குவித்தது போல் பாரா ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments