Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட்டை இழக்காமல் இலக்கை நெருங்கும் பாகிஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதியா?

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:08 IST)
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டியை தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 153 என்ற இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான் அணி சற்று முன் வரை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் 60 பந்துகளில் 66 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளதால் பாகிஸ்தான் அணி எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தினால் இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதும்  என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்தரத்தில் தொங்கும் பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி! அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்! - என்ன காரணம்?

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

அடுத்த கட்டுரையில்
Show comments