Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினின் இந்த சாதனையை கோலியால் தொடமுடியாது… பயிற்சியாளர் கருத்து!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:19 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை தொட்டார்.

இந்திய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக விளங்குபவர் விராட் கோலி. தோனிக்கு பிறகு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கோலி தற்போது அனைத்து வகை போட்டிகளிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இன்று நடைபெற்று வரும் இலங்கை – இந்தியா டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடி வரும் நிலையில் இது அவரது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இதனை கௌரவிக்கும் வகையில் விராட் கோலிக்கு 100 எண் பொறித்த தொப்பியை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பரிசாக வழங்கியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் கோலியின் இந்த 100வது டெஸ்டை ஹேஷ்டேகுகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

சச்சினின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஒரே வீரராக கோலி கருதப்படுகிறார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமான் கெய்க்வாட் ‘கோலி சச்சின் ஒருநாள் போட்டிகளில் அடித்த 49 சதங்கள் என்ற சாதனையை சமன் செய்வார். ஆனால் அவர் சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதை எப்போது  முறியடிக்க முடியாது. கோலி ஃபிட்டாக இருக்கும் வரை அவரை யாராலும் தொட முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments