Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிவ்யூவை வீணாக்கிய இந்தியா – முதல் விக்கெட்டை இழந்து நியுசிலாந்து தடுமாற்றம் !

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (15:33 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணி தடுமாறி வருகிறது.

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்திய நேரப்படி இந்தப் போட்டி மதியம் 3 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் இன்று மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்தாலும் போட்டிக் குறித்த நேரத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது. இன்னிங்ஸின் முதல் பந்தை வீசினார் புவனேஷ் குமார் அது மார்டின் கப்திலின் காலில் பட எல்பிடபுள்யூ கேட்டனர் இந்திய அணியினர். ஆனால் நடுவர் மறுக்கவே புவியின் அழுத்தத்தால் கோஹ்லி ரிவ்யூ கேட்க ரீப்ளேயில் பந்து ஸ்டம்ப்புக்கு வெளியே செல்ல நாட் அவுட் ஆனது. அதனால் இந்திய அணி முதல் பந்திலேயெ டிஆர்எஸ் வாய்ப்பை இழந்தது.

அந்த கண்டத்தில் இருந்து தப்பிய கப்தில் 4 ஆவது ஓவரில் பூம்ரா பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அவர் 14 பந்துகளில் 1 ரன் சேர்த்தார். தற்போது வரையில் நியுசிலாந்து அணி 6 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழந்து 8 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து ‘முடிச்சு வீட்டீங்க போங்க’… இன்னைக்கு ‘இருங்க பாய்’… கலக்கிய இந்திய பவுலர்கள்!

பவுன்சர் வந்தால் அதை விட்டுவிடு… இளம் வீரருக்குக் கம்பீர் சொன்ன அட்வைஸ்!

ரோஹித், கோலியை அடுத்து முக்கிய மைல்கல்லை எட்டிய ரிஷப் பண்ட்!

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments