Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான நியுசிலாந்து அணி அறிவிப்பு – சமாளிக்குமா இந்தியா ?

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (14:13 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நியுசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நியுசிலாந்து சென்று கலக்கி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. நியுசிலாந்து மண்ணில் இந்தியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் டி 20 தொடரிலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் ஷர்மா தலைமை தாங்க இருக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்குப் பின் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடருக்கான நியுசிலாந்து அணியை அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த  வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷனுக்கு பதிலாக டிக்னரும், வீரர் நீஷம்க்கு பதிலாக பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல் என்பவர் புதுமுக வீரரும் அறிமுகமாகிறார்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெல்லிங்டன் நகரில் பிப்ரவரி 6-ம் தேதியும், 2-வது போட்டி 8-ம் தேதி ஆக்லாந்திலும், 3-வது போட்டி 10-ம் தேதி ஹேமில்டனும் நடக்கிறது.

நியூசிலாந்து அணி விவரம்:
கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), மார்டின் கப்தில், ஸ்காட் குக்கலேஜின், டேர்ல் மிட்ஷெல், காலின் மன்ரோ, மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், பிளையர் டிக்னர் (3-வது போட்டிக்கு மட்டும்)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments