Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 ஓவர்களில் முடிந்தது 4 ஆவது ஒருநாள் போட்டி – இந்தியா படுதோல்வி !

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (11:16 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் நியுசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
 

நியுசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று தொடங்கிய 4 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நிதானமாக பேட் செய்த இந்திய அணிக்கு ஆறாவது ஒவரில் இருந்து சரிவு ஆரம்பித்தது. டிரண்ட் போல்ட் வீசிய 6 ஆவது ஓவரின் கடைசி பந்தில் தவான் 13 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் 8வது ஓவரில் ரோஹித் சர்மா, 11வது ஓவரில் ராயுடு, அதே ஓவரில் தினேஷ் கார்த்திக், 12 வது ஓவரில் ஷுப்மான் கில், 14வது ஓவரில் கேதார் ஜாதவ் என அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுக்கள் விழுந்தன. இவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அதன் பின்னர் வந்த பின்வரிசை ஆட்டக்காரர்களில் ஹர்திக் பாண்ட்யா(16), குல்தீப்(15), சஹால்(18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க எண்களைத் தொட்டனர். இதனால் இந்திய அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. வரிசையாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இன்று 100 ரன்களுக்குள் சுருண்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.நியுசிலாந்தின் டிரண்ட் போல்ட் 10 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.  கிராந்தோம் 3 விக்கெட்களும் ஆஸ்லே மற்றும் நீஷம் ஆகியோர் தல 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 

இதனையடுத்து 93 ரன்கள் எளிய இலக்கை நோக்கி நியுசிலாந்து தனது இன்னிங்ஸை விளையாடிய நியுசிலாந்து அணி 14 .4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 93 ரன்களை சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும் ஹென்றி நிக்கோல்ஸ் 30 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். முன்னதாக மார்ட்டின் கப்தில் 14 ரன்களிலும் வில்லியம்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புவனேஷ்குமார் இருவரது விக்கெட்களையும் கைப்பற்றினார். இதனால் போட்டி 46 ஓவர்களிலேயே முடிந்தது. சமீபகாலமாக இந்தியா அடைந்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

சிறப்பாகப் பந்து வீசிய ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட நியுசிலாந்து இந்த தொடரில் முதல் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments