Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளுக்கு முன்னர் தோனியைக் கடுமையாக திட்டிய நெஹ்ரா – ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:42 IST)
பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தன்னுடைய பந்தில் ஒரு கேட்ச்சை விட்டதற்காக தோனியைக் கடுமையாக திட்டியதை நெஹ்ரா இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் நெஹ்ரா. தனது பந்துவீச்சின் போது எப்போதும்  ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நெஹ்ரா யாராவது கேட்ச்களை தவறவிட்டால் தனது கோபத்தைக் கடுமையாக வெளிப்படுத்தும் குணமுள்ளவர்.

இந்த வரிசையில் அவரிடம் பல இந்திய வீரர்கள் களத்திலேயே நிறைய திட்டு வாங்கியுள்ளனர். 2005 ஆம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் அப்ரிடொயின் கேட்ச்சை தவற விட்ட தோனியை அவர் கடுமையாக திட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதைப் பற்றி தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள நெஹ்ரா ‘அந்த போட்டியில் அப்ரிடி என்னுடைய பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிப்பார். ஆனால் அடுத்த பந்தில் வந்த கேட்சை தோனி மிஸ் செய்துவிடுவார். அந்த கேட்ச்சை தோனி தவறவிட்டதால் நான் அவரிடம் மோசமாக நடந்துகொண்டேன். அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம். போட்டி முடிந்த பின்னர் என்னுடைய செயல் நியாயமானதுதான் என்று தோனி சொன்னாலும் நான் என் செயலை நினைத்து வருத்தமடைந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments