Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் சாம்பியன்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (07:00 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால், ரஷ்யாவின் மெட்வதேவ் என்பவருடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை நடால்  7-5 என்ற செட்டில் கைப்பற்றி முன்னேறியதால் அவரது வெற்றி பிரகாசமானது. இதனையடுத்து இரண்டாவது செட்டில் 6-3 என்ற செட் கணக்கில் மெட்வதேவ்வை நடால் வீழ்த்தினார். இதனால் நடால் வெற்றி மேலும் பிரகாசமானது
 
 
இதனையடுத்து ரஷ்யாவின் மெட்வதேவ் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நடாலுக்கு சவால் அளித்தார். ஆனால் அடுத்த செட்டை 6-4 என்று கைப்பற்றி நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இந்த ஆண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார். இந்த போட்டி சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments