Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிட்ட கிரிக்கெட்... டிவி சீரிஸில் தோனி!!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (12:54 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் டிவி சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய அணியின் பல வெற்றிகளும் சாதனைகளுக்கும் காரணமான சில முக்கிய வீரர்களில் தோனியும் ஒருவர். இவர் சமீப காலமாக இந்திய அணிக்காக விளையாடமல் இருந்து வருகிறார். இந்திய தேர்வு அணியும் இவருக்கு பதிலாக தற்போது ரிஷப் பந்தை விக்கெட் கீப்பராக அணியில் சேர்த்து வருகிறது. 
 
இதற்கு இடையில் இந்திய ராணுவத்திலும் இரண்டு வார காலம் தனது சேவையை வழங்கி வந்தார். தற்போது இவர் டிவி சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்கள் தொடர்பாக டிவி சீரியலை தோனி தயாரிக்க உள்ளாராம். 
 
ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த சீரிஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதற்காக, தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளதாம்.  
 
இந்த நிறுவனம், ஸ்டூடியோநெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து டிவி சீரிஸை தயாரிக்க உள்ளது. இது சோனி டிவியில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments